கஞ்சா, சாராய வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்


கஞ்சா, சாராய வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்
x

ஆரணியில் கஞ்சா, சாராய வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், ஆரணி சரக காவல் நிலைய பகுதிகளில் நடைபெறும் கந்துவட்டி சம்பந்தமாக ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திலும், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம்.

புகார் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரணி துணை போலீஸ் சூப்பரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் ஆரணி கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை இல்லை. என்றாலும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர். போதை பொருட்களை தடுக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, சாராய வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.



Next Story