வங்கி ஏ.டி.எம். மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
வங்கி ஏ.டி.எம். மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்ட உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு குற்ற தடுப்பு பணிக்காக அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் மேற்கண்ட உத்தரவுகளை போலீஸ் அதிகாரிகள் பின்பற்றப்படுகிறார்களா? என அறியும் வகையில் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகிறதா? என திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஏ.டி.மையங்களில் போலீசார் தணிக்கை செய்யும்போது, முறையாக கையொப்பம் செய்துள்ளார்களா? இதனை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தணிக்கை செய்ததை உறுதி செய்துள்ளார்களா? எனவும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் குற்றத் தடுப்பு பணிகள் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமனுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் உடனிருந்தார்.