புதுகட்டளை மேட்டு வாய்க்கால் கரை உடைப்பு

புதுகட்டளை மேட்டு வாய்க்கால் கரை உடைப்பு
x

நீர் வரத்து அதிகரிப்பால் புது கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை உடனடியாக சரி செய்ய நீர்வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

திருச்சி

நீர் வரத்து அதிகரிப்பால் புது கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை உடனடியாக சரி செய்ய நீர்வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

வாய்க்கால் கரை உடைப்பு

திருவெறும்பூர் அருகே கும்பக்குடியில் உள்ள புதுகட்டளை மேட்டு வாய்க்காலில் நீர்வரத்தினை தொடர்ந்து 5 மீட்டர் நீளத்துக்கு கரை உடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இந்த வாய்க்கால் கரை உடைப்பை நேற்று நேரில் பார்வையிட்டு உடைந்த கரையை உடனடியாக சரி செய்ய நீர்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம் உள்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

22 ஆயிரம் ஏக்கர் பாசனம்

இதனை தொடர்ந்து கலெக்டர் பிரதீப் குமார் நிருபர்களிடம் கூறும்போது, கும்பக்குடி பகுதியில் உள்ள புதுகட்டளை மேட்டு வாய்க்காலில் சிறு உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்தஉடைப்பில் இருந்து வெளிவரக்கூடிய தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டம் பிடாரி ஏரியில் கலக்கிறது. இதன் மூலம் 22 ஆயிரம் ஏக்கர் பாசனம் உள்ளது. இந்த சிறிய உடைப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. உடனடியாக இந்த உடைப்பு சரி செய்யப்பட்டுவிடும் என்றார்.

Next Story