விபத்தில் படுகாயமடைந்த வங்கி ஊழியர் சாவு
தக்கலை அருகே விபத்தில் படுகாயமடைந்த வங்கி ஊழியர் சாவு
தக்கலை,
திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர், மஞ்சரவிளையை சேர்ந்தவர் யூஜின் (வயது36). திங்கள்சந்தையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று யூஜின் வேலைக்கு சென்றுவிட்டு பத்மநாபபுரம் வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சாரோடு பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. இதில் யூஜின் தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் யூஜின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த யூஜினுக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
-----------
(படம் உண்டு)