திருப்பூர் மாவட்டத்தில் 554 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.22½ கோடி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை திருச்சியில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் 554 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.22½ கோடி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை திருச்சியில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 554 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.22½ கோடி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை திருச்சியில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை திருச்சியில் நடந்தது.இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் கொடுவாயில் உள்ள திருமண மண்டபத்தில் 554 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை காணொலிக்காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கொடுவாயில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவிகளை வழங்கினார்கள்.
மகளிர் சுயஉதவிக்குழுக்கள்
விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலமாக சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்படுகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த மகளிரை கொண்டு சுயஉதவிக்குழுக்களை அமைத்து அவர்களுக்கு குழுக்கடன் மற்றும் வங்கிக்கடன் மூலம் குழுக்களை இணைத்தல் மூலமாக அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் 5 ஆயிரத்து 650 சுயஉதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 494 சுயஉதவிக்குழுக்களும் என மொத்தம் 9 ஆயிரத்து 144 சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 2022-23-ம் ஆண்டில் 5 ஆயிரத்து 143 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.273 கோடியே 72 லட்சம் கடன் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் 2022-23-ம் ஆண்டில் சமுதாய முதலீட்டு நிதியாக 639 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.9 கோடியே 58½ லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. 417 பேருக்கு வேலைவாய்ப்புடன் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.22½ கோடி கடனுதவி
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தில் 227 சுயஉதவிக்குழுக்களில் உள்ள 2 ஆயிரத்து 723 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 15 லட்சம் மதிப்பில் வங்கிக்கடனுதவி, 3 சுயஉதவிக்குழுக்களில் உள்ள 426 பேருக்கு ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் ஊராட்சி அவிலான கூட்டமைப்புக்கான நிதி உதவி, 124 சுயஉதவிக்குழுக்களில் உள்ள 1,538 பேருக்கு ரூ.5 கோடியே 91 லட்சம் மதிப்பில் சுய வேலைவாய்ப்பு திட்டம் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடனுதவி உள்பட மொத்தம் 554 சுயஉதவிக்குழுக்களில் உள்ள 8 ஆயிரத்து 853 பயனாளிகளுக்கு ரூ.22 கோடியே 65 லட்சம் மதிப்பில் வங்கிக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மதுமிதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.