புதிய தொழில் தொடங்க 30 சதவீத மானியத்தில் வங்கி கடன்-கலெக்டர் அம்ரித் தகவல்


புதிய தொழில் தொடங்க 30 சதவீத மானியத்தில் வங்கி கடன்-கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க 30 சதவீத மானியத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க 30 சதவீத மானியத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி நிதி உதவி

உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக பகுதிகளில் வறுமை ஒழிப்பு, ஊரக தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நீலகிரியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஊரக சமுதாயத்தில் வளம் மற்றும் நிலைத்த உயர்வை உருவாக்கி பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள தனிநபர் தொழில் முனைவோர் ரூ.15 லட்சத்திற்கு மேல் திட்ட மதிப்பீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை மேம்படுத்துவதற்கும் வங்கிகள் மூலம் திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்கான ஊரக பகுதிகளில் உள்ள தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதிகள்

இந்த திட்டத்தில் பயன்பெற 25 முதல் 45 வரை வயது இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஊரக பகுதியில் இருக்க வேண்டும். மேலும் அவரது குடும்ப உறுப்பினர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். சுயஉதவி குழு வங்கி கடன் பெற்றிருந்தால் முறையாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் சிறப்பு பிரிவினராக இருந்தால், 5 சதவீதம் மற்றும் இதர பிரிவினராக இருந்தால் 10 சதவீதம் தனது சொந்த பங்களிப்பாக இருக்க வேன்டும்.

மேலும் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு 9677916552, 9578779904 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


Next Story