வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை


வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நெல்லையில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

நெல்லையில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வங்கி மேலாளர்

நெல்லை பாளையங்கோட்டை செயின்ட் பால்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). இவர் நெல்லை மாவட்டம் மூைலக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மாரியம்மாள் மூன்றடைப்பில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

தற்கொலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட வங்கிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையொட்டி அவர் விடுமுறையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள அறையில் முருகேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் இடமாறுதலால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story