பூட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு
பூட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு ரூ.2¾ லட்சம் காணிக்கை வசூல்
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று கோவில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 492, 60 கிராம் தங்க நகைகள், 41 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாகொளஞ்சியப்பன், துணை தலைவர் பச்சமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சரோஜா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கந்தசாமி, ஆறுமுகம், முருகன், ஊராட்சி செயலாளர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story