வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானியத் திட்டம் குறித்து வங்கியாளர்கள்,அலுவலர்களுக்கான விளக்க கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானியத் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கான திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானியத் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கான திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 308 ஊராட்சிகள் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் தொழில்முனைவோருக்கு இணை மானிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கான திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படும் மூலம் தனிநபர் மற்றும் தொழில் குழு முனைவுகளை ஏற்படுத்துதல், அந்நிறுவனங்களுக்கு தேவையான நிதி இணைப்பினை ஏற்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி நீடித்த நிலையான மேம்பாட்டினை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஊரக பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்கள் புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்திட வங்கியுடன் கடன் இணைப்பு செய்து அதில் நன்றாக கடன் திருப்பம் செய்யும் தொழில் முனைவோர்களையும் தேர்வு செய்து ஊக்க நிதி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனை தகுதியாக கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள தொழில்சார் சமூக வல்லுனர்களை கொண்டு சேகரிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கான கடன் விண்ணப்பத்தினை 3 ஒன்றியங்களுக்கான ஓரிட சேவை மையத்திற்கு சமர்ப்பிக்கப்படும். அதில் தகுதியான விண்ணப்பங்கள் வட்டார மற்றும் மாவட்ட அலுவலகத்தின் மூலம் நிதி வழங்கும் நிறுவனத்திற்கு அளிக்கப்படும்.
சமர்ப்பிக்க வேண்டும்
அதன்பின் கடன் அனுமதி வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு அதற்குண்டான இணை மானியத்தினை பெறுவது குறித்து மாவட்ட செயல் கமிட்டியில் ஒப்புதல் பெறப்பட்டு அக்கருத்துருவினை மாநில அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜெயம், மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) சோமசுந்தரம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சையத்சுலைமான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன் உள்பட துறை உயர் அலுவலர்கள், செயல் அலுவலர்கள், இளம் வல்லுனர்கள் மற்றும் வட்டார அணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.