தாலுகா தலைமையிடங்களில் வங்கிகள் இன்று செயல்படும்
பயிர் காப்பீடு செய்வதற்கு வசதியாக தாலுகா தலைமையிடங்களில் வங்கிகள் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-பயிர் காப்பீடு செய்வதற்கு வசதியாக தாலுகா தலைமையிடங்களில் வங்கிகள் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நெல், ராகி பயிர் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சம்பா நெல் பயிருக்கு வருகிற 15 ஆம் தேதிவரையும், ராகி பயிர்களுக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி வரையும் குளிர்கால நெற் பயிர்களுக்கு (ராபி) ஜனவரி 31 -ந் தேதி வரையும் காப்பீடு செய்யலாம் என அறிவசிக்கப்பட்டது.
அதன்படி காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.494.09 ராகி பயிருக்கு ரூ172.43 என பிரீமிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி இறுதி நாள் என்பதால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தாலுகா தலைமையிடத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் (திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் நாட்றம்பள்ளி) மற்றும் 61 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும். எனவே அனைத்து நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அறிவிக்கப்பட்ட 138 கிராமங்களில் பயிர்காப்பீட்டுக்கு பிரிமிய தொகை செலுத்தி பயன்பெறலாம் என கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.