மதுக்கடை ஊழியருக்கு மிரட்டல்


மதுக்கடை ஊழியருக்கு மிரட்டல்
x

மதுக்கடை ஊழியருக்கு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் கீழ்வேளூர் ெரயில்வே கேட் பகுதியில் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் பாரதிதாசன் (வயது52) மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மதுக்கடைக்கு சென்ற பட்டமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அம்பேத்கர் மகன் அஜித்(வயது26), ராதாமங்கலம் எறும்புகன்னி பகுதியை சேர்ந்த மொட்ட‌ முருகன் மகன் புகழேந்திரன், பட்டமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராமு மகன் சபரிநாதன் ஆகிய 3 பேரும் கடையில் இருந்த பாரதிதாசனிடம் இலவசமாக மது கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாரதிதாசன் கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். மேலும் புகழேந்திரன், சபரிநாதன் இருவரையும் தேடி வருகின்றனர்.


Next Story