அக்னீஸ்வரர் கோவிலில் பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு
அக்னீஸ்வரர் கோவிலில் பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை
பொறையாறு:
பொறையாறு அருகே நல்லாடையில் பிரசித்தி பெற்ற சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அக்னீஸ்வரர், சுந்தரநாயகி ஆகிய சாமிகளுக்கு பால், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக கோவில் வளாகத்தில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு அங்கு பரணி நட்சத்திரக்காரர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story