முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்க கூட்டம்
கோவில்பட்டியில் மருத்துவர் முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி மருத்துவர் முடி திருத்துவோர் தொழிலாளர் சங்க கூட்டம் வ. உ. சி. நகர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் குருசாமி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் இசக்கி முத்து, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், நகர செயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர்கள் பூமிநாதன், எம். மாரிமுத்து, துணை தலைவர் பி. முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். கூட்டத்தில், விலைவாசி உயர்வையொட்டி முடி திருத்தும் கட்டணத்தை உயர்த்துவது என்று ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது. சங்க பொருளாளர் கருமாரி ஈஸ்வரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story