ஓட்டலுக்குள் புகுந்து உரிமையாளருக்கு கொலை மிரட்டல்


ஓட்டலுக்குள் புகுந்து உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
x

கடலூரில் ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர்

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 72). இவர் கடலூர் பஸ் நிலையம் எதிரே ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் அவரது ஓட்டலுக்கு வந்த அய்யப்பன் என்பவர் ராஜமாணிக்கத்திடம் சாம்பார் சாதம் கேட்டுள்ளார். அப்போது சில்லரை கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவரும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலை மிரட்டல்

இதற்கிடையே இந்த முன்விரோதம் காரணமாக அய்யப்பனின் உறவினரான கடலூர் மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் தஷ்ணாமூர்த்தி தனது ஆதரவாளர்கள் 2 பேருடன் ராஜமாணிக்கத்தின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது மனைவி ஆனந்தியை ஆபாசமாக திட்டியுள்ளனர். மேலும் அவரது ஓட்டலுக்குள் புகுந்து பொதுமக்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு வழிமறித்து ராஜமாணிக்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ராஜமாணிக்கம், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஏ.ஜி.தஷ்ணாமூர்த்தி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story