தடுப்புகள் அமைத்து பஸ்நிலையம் மூடல்-உசிலம்பட்டியில், வியாபாரிகள் சாலை மறியல்-எம்.எல்.ஏ. பங்கேற்பு

தடுப்புகள் அமைத்து பஸ்நிலையம் மூடல்-உசிலம்பட்டியில், வியாபாரிகள் சாலை மறியல்-எம்.எல்.ஏ. பங்கேற்பு
x

உசிலம்பட்டியில் தடுப்புகள் அமைத்து பஸ்நிலையம் மூடப் பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகளுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. சாலை மறியலில் ஈடுபட்டார்.

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டியில் தடுப்புகள் அமைத்து பஸ்நிலையம் மூடப் பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகளுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. சாலை மறியலில் ஈடுபட்டார்.

உசிலம்பட்டி பஸ் நிலையம்

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என 4 மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியில் உசிலம்பட்டி பஸ் நிலையம் அமைந்துள்ளது.

இந்த பஸ் நிலையம் கடந்த 1996-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பிக்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 2 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தற்போது உள்ள பஸ் நிலையத்தை நகராட்சி நிர்வாகத்தினர் இரவோடு இரவாக தடுப்புகள் அமைத்து மூடினார்கள்.

சாலை மறியல்

இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் நிலைய வியாபாரிகள் சங்கத்தினர் அதன் தலைவர் கார்த்தி தலைமையில் முன் அறிவிப்பின்றி பஸ் நிலையத்தை மூடியதாக குற்றம் சாட்டி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ.அய்யப்பன், நகராட்சி ஆணையளர் பாண்டித்தாய், நகர்மன்ற தலைவர் சகுந்தலா கட்டபொம்மன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையில் தற்போது போடப்பட்டுள்ள தடையை அகற்றி விடுங்கள். அதன் பின்னர் வியாபாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பஸ் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தார். இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் வியாபாரிகளுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. அய்யப்பன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

உசிலம்பட்டியில் தடுப்புகள் அமைத்து பஸ்நிலையம் மூடப் பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகளுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. சாலை மறியலில் ஈடுபட்டார்.

உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி அதிகாரிகள் அய்யப்பன் எம்.எல்.ஏ.வுடனும், வியாபாரிகளுடனும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அமைக்கப்பட்ட தடுப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றிய நிலையில் கால அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து துறையினரும் அனுமதி பெற்ற பின் பணிகள் தொடங்கும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story