கால்வாயில் குப்பை கொட்டாத வகையில் தடுப்புவேலிகள் அமைக்கப்படும்


கால்வாயில் குப்பை கொட்டாத வகையில் தடுப்புவேலிகள் அமைக்கப்படும்
x

கால்வாயில் குப்பை கொட்டாத வகையில் தடுப்புவேலிகள் அமைக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி 53-வது வார்டு சாமிநகர், பள்ளஇடையம்பட்டி பகுதிகளில் மேயர் சுஜாதா, சுகாதார அலுவலர் பாலமுருகன், கவுன்சிலர் பாபிகதிரவன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஒவ்வொரு தெருவாக சென்று பொதுமக்களிடம் குறைகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். அப்போது மேயர் சுஜாதாவிடம் பொதுமக்கள் கூறுகையில், ''சாமிநகரில் சில தெருக்களில் கால்வாய் வசதியில்லை. எனவே கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் சாலைகள் அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்க வேண்டும். கால்வாய்களில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். பள்ளஇடையம்பட்டி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். மேலும் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கு சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டி வசதியும் ஏற்படுத்த வேண்டும்'' என கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மாநகராட்சி மேயர் சுஜாதா கூறுகையில், ''பொதுமக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் கால்வாயில் குப்பைகள் கொட்டுகின்றனர். குப்பை கொட்டாத வகையில் கால்வாய் மேற்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது'' என்றார்.


Next Story