அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்
திருவெண்காடு அருகே நெப்பத்தூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கலெக்டருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே நெப்பத்தூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கலெக்டருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே நெப்பத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தீவு மாந்தோப்பு பகுதியில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்களில் இறப்பு ஏற்பட்டால் மயானத்துக்கு கொண்டு செல்லப்பாதை இல்லை. இதுகுறித்து சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லலிதா அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் மயான சாலை அமைப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி, குடிநீர் வசதி, குடியிருப்பு வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உரிய நடவடிக்கை
இதையடுத்து மயானத்துக்கு செல்லும் பாதையில் நடந்து சென்று பார்வையிட்டு. பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயான சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி இணை இயக்குனர் ஸ்ரீலேகா, கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மரகதம் அகோரமூர்த்தி, துரைராஜ், ஒன்றிய கவுன்சிலர் நடராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.