தசராதிருவிழாபக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை


தசராதிருவிழாபக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தசராதிருவிழாபக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம் கண்டுகொண்ட விநாயகர் கோவில் வளாகத்தில் நடந்தது. ஒன்றிய பொதுச்செயலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் சித்திரை பெருமாள் இறைவணக்கம் பாடினார். நகர செயலாளர் இத்திசெல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலர் ஆ.சுடலைமுத்து உட்பட நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் போது பக்தர்களுக்கு குடிநீர், சாலை வசதி, மின்சாரவசதி, சுகாதாரம், மருத்துவவசதி உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உணடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜகோபுரம் அருகில் பழமையான கற்களை எடுத்துவிட்டு பளபளப்பான புதிய கற்களை பதிப்பதை நிறுத்த வேண்டும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சிறப்பான பாதுகாப்பு மற்றும் உதவிகளை செய்த போலீஸ் துறை, மின்சார வாரியம் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நகர பொருளாளர் சதீஷ்கிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story