குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் பாலாலயம்


குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் பாலாலயம்
x

குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் பாலாலயம் நடந்தது

கரூர்

குளித்தலை,

குளித்தலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக இந்த கோவிலில் பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி மற்றும் கலசங்களில் புனித நீர் வைத்த பட்டு முதல் யாக கால பூஜைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. பின்னர் யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இக்கோவிலில் உள்ள ராஜகோபுரம், பரிவார விமானங்கள், பரிவார மூர்த்திகள் ஆகியவற்றிற்கு சிவாச்சாரியார்கள் மூலம் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இக்கோவிலில் உள்ள மூலவரான கடம்பவனேசுவரர், முற்றிலா முலையம்மை (அம்பாள்), விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகளுக்கு பின்னர் பாலாலயம் செய்யப்பட உள்ளது. அதுவரை கோவிலில் உள்ள இந்த சுவாமிகளுக்கு பூஜைகள் வழக்கம்போல நடைபெறும். இதில், குளித்தலை எம்.எல்.ஏ. இரா. மாணிக்கம், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, கோவில் செயல் அலுவலர் குழந்தைவேல் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story