தியாகராஜருக்கு நீராட்டு விழா


தியாகராஜருக்கு நீராட்டு விழா
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜருக்கு நீராட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூர் தியாகராஜருக்கு நீராட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என கூறப்படும் இத்தேரோட்ட நிகழ்ச்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.. ஆழித்தேர் கோவிலின் நான்கு வீதிகளையும் சுற்றி நேற்று முன்தினம் மாலை நிலையை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை தியாகராஜருக்கு சிறப்பு நீராட்டு விழா நடந்தது. மாலையில் வில்லும் அம்புமாய் முப்புரம் எரித்த மூர்த்தி வீதி உலா மற்றும் பிச்சாண்டவர் புறப்பாடு நடந்தது. தேரோட்டம் முடிந்த பிறகு நேற்றும் திரளான பக்தர்கள் வந்து தேரைபார்த்து தரிசனம் செய்து சென்றனர்.

1,500 போலீசார் பாதுகாப்பு பணி

தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தேரோட்டத்தின் போது 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்ட நிலையிலும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தேரோட்டம் அமைதியாக நடந்தது. பொதுவாக தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களிடம் நகை உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி செல்வது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு ஆழித்தேரோட்ட பாதுகாப்பு பணியில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டதால் நகை திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போய் உள்ளதாக புகார் வந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிலரது செல்போன்கள் காணாமல் போய் உள்ளது. இதை தவிர ஒரு குற்ற சம்பவம் கூட நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்தனர்.


Next Story