வாகனங்களில் பேட்டரி திருட்டு


வாகனங்களில் பேட்டரி திருட்டு
x

வாகனங்களில் பேட்டரி திருட்டு

கன்னியாகுமரி

குலசேகரம்:

கடையால் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் பேரூராட்சி வாகனங்கள் அருகில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூராட்சிக்கு சொந்தமான வாகனங்களில் உள்ள பேட்டரிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கடையால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story