தியாகதுருகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பேட்டரி வாகனங்கள்
தியாகதுருகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்,
தியாகதுருகம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி தலைமை தாங்கி ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 750 மதிப்பிலான 3 பேட்டரி வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) மேகநாதன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் சங்கர், தி.மு.க. நகர செயலாளர் மலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் இளநிலை உதவியாளர் கொளஞ்சியப்பன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story