மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வீல் சேர்


மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வீல் சேர்
x

மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வீல் சேர் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி தலைமையில் நடந்தது. அவர் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் கேட்டும், பொதுநலன் குறித்தும் பொதுமக்களிடமிருந்து 261 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பேட்டரி வீல் சேரை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஹரிஹரன், முத்தையன், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கலால் உதவி ஆணையர் பானு உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story