மார்க்கெட்டிற்கு 5 டன் சுரைக்காய் வரத்து


மார்க்கெட்டிற்கு 5 டன் சுரைக்காய் வரத்து
x

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று சுரைக்காய் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் 15 கிலோ சுரைக்காய் மூட்டை ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நேற்று சுரைக்காய் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் 15 கிலோ சுரைக்காய் மூட்டை ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வரத்து அதிகரிப்பு

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள காய்கறி மொத்த மார்க்கெட்டிற்கு கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு காய்கறிகளின் வரத்தும் அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக பீர்க்கங்காய், சுரைக்காய், முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி போன்றவை அதிக அளவில் வருகின்றன. இதேபோன்று நேற்று அவினாசி, சேவூர், கருமத்தம்பட்டி, பல்லடம், பொங்கலூர் மற்றும் திருப்பூரின் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 5 டன் சுரைக்காய் வரத்து இருந்தது.

இதில் பீர்க்கங்காய் வரத்து சுமார் 6 டன் இருந்தது. மேலும் முள்ளங்கியும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

விலை சரிவு

இவ்வாறு காய்கறிகள் வரத்து அதிகம் இருந்ததால் சுரைக்காய், பீர்க்கங்காய், முள்ளங்கி ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை மிகவும் குறைவாக இருந்தது. சாதாரண நாட்களில் 15 கிலோ சுரைக்காய் மூட்டை ரூ.300-க்கு விற்கப்படும் நிலையில் நேற்று ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் ஒரு சில மூட்டைகள் மட்டும் ரூ.200-க்கும், சற்று தரம் குறைந்தவை ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அத்துடன் 15 கிலோ கொண்ட பீர்க்கங்காய் கட்டின் வழக்கமான விலை ரூ.700 ஆக உள்ள நிலையில் நேற்று ரூ.400 முதல் ரூ.500-க்கு விற்கப்பட்டது. 27 கிலோ முள்ளங்கி கட்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை சரிவு ஏற்பட்டிருப்பது வியாபாரிகளுக்கு கவலை தருவதாக உள்ளது.


Related Tags :
Next Story