கடற்கரையில் தூய்மை பணி
வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி நடந்தது.
வேதாரண்யம்:
சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவின்படி தூய்மை இயக்கம் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டியும் வேதாரண்யம் பகுதியில் தூய்மை பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தூய்மை பணி நடந்தது. கடற்கரையில் பொதுமக்கள் விட்டுச் சென்ற ஆடைகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். பின்னர் இவற்றை குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். இதை ெதாடர்ந்து நகர் மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நகர் மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி, உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதேபோல் கடற்கரைக்கு செல்லும் சாலை உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணி நடந்தது. மேலும் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் குப்பைகளை கண்ட இடங்களில் போடக்கூடாது என வலியுறுத்தியும் அறிவுரை பிரசுரங்கள் வழங்கபட்டது.