துணை மின்நிலையத்தில் கரடி நடமாட்டம்
விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலையத்தில் கரடி நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவி வைரலானது.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் டாணா பகுதியில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் உள்ளது. அங்கு இரவு நேரத்தில் நடமாடும் கரடியை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவி வைரலானது.
இதனால் டாணா துணை மின் நிலையத்தில் ஊழியர்கள் அச்சத்துடனே பணியாற்றி வருகின்றனர். எனவே கரடியை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும், அங்கு வனவிலங்குகள் புகாதவாறு கம்பிவேலியை முறையாக அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story