பள்ளி கதவை உடைத்து பொருட்களை சூறையாடிய கரடி


பள்ளி கதவை உடைத்து பொருட்களை சூறையாடிய கரடி
x

குன்னூர் அருகே கரடி ஒன்று பள்ளி கதவை உடைத்து பொருட்களை சூறையாடியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே கரடி ஒன்று பள்ளி கதவை உடைத்து பொருட்களை சூறையாடியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கதவை உடைத்தது

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. மேலும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கரடிகள் உணவு மற்றும் தண்ணீரை ேதடி கிராமங்களுக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் குன்னூர் அருகே நான்சச் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் இரவு அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்குள் கரடி புகுந்தது. பள்ளியில் வகுப்பறை கதவுகளை உடைத்து உள்ளே சென்றது. அங்கு பதிவேடுகள் வைக்கப்பட்டு இருந்த பீரோைவ உடைத்த கரடி, உள்ளே இருந்த பொருட்களை சூறையாடியது. மேலும் சத்துணவு கூடத்தில் வைக்கப்பட்டு இருந்த சமையல் எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை தின்றும் சேதப்படுத்தியது.

பிடிக்க வேண்டும்

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பள்ளிக்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் பள்ளிக்குள் 3-வது முறையாக புகுந்து சேதப்படுத்திய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேபோல் கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவிற்குள் 2 குட்டிகளுடன் கரடி ஒன்று புகுந்தது. இதனால் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பட்டாசு வெடித்து 2 குட்டிகளுடன் கூடிய கரடியை அருகே உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story