குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடிகள்


குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடிகள்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

வனவிலங்குகள்

கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை விளங்குகிறது. இங்குள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

அச்சம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை நேரத்தில் அங்குள்ள சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வந்தன. இந்த காட்சிகள் அங்குள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இதே பகுதியில் கடந்த சில மாதங்களில் 2 சிறுத்தைகள், 2 கருஞ் சிறுத்தைகள், 2 கரடிகள் மற்றும் முள்ளம் பன்றிகள் உலா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story