கட்டில், மெத்தை, பேன், டிவி.. வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல்


கட்டில், மெத்தை, பேன், டிவி.. வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல்
x

புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை பழங்கள் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை,

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், நீதிமன்றக் காவலின்படி புழல் மத்திய சிறைக்கு நேற்று அவர் மாற்றப்பட்டார்.

முழுமையாக அவரது உடல்நிலை சீரடையாததால் சிறை மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை பழங்கள் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ அடிப்படையில் பழங்கள் சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல் வகுப்பு சிறையில் வைக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கட்டில், தலையணை, மின்விசிறி, மேசை, நாற்காலி, புத்தகங்கள், தனி கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிடைக்கப்பெற உள்ளன.

புழலில் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்படும் சலுகைகள் என்னென்ன?

* சிறையில் வழக்கமான உணவுடன் சப்பாத்தி கூடுதலாக வழங்கப்படும்

* வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி வழங்கப்படும்

* 3 நாள்தோறும் அளிக்கப்படும் பால், தேநீர் அளவு அதிகரிக்கப்படும்

* சிறையில் கைதிகள் அணியும் சீருடைக்கு பதிலாக சாதாரண உடைகளை அணிந்து கொள்ளலாம்

* தங்கும் அறையின் அளவு சற்று பெரிதாக இருக்கும்; மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, கொசுவலை, நாளிதழ்கள், தொலைக்காட்சி போன்ற வசதிகள் இடம்பெறும்

* சிறை கண்காணிப்பாளர் அனுமதியளித்தால் சிறையில் இருக்கும் பாத்திரங்களுக்கு பதிலாக வெளியே இருந்து ஹாட்பாக்ஸ், தட்டு பயன்படுத்தலாம்

* சிறையில் வளாகத்தில் நடத்தப்படும் உணவகத்தில் ரூ.1,000 மதிப்பிலான பொருட்கள் வாங்கிக் கொள்ள அனுமதி

* முதல் வகுப்பு கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்படும்

* மருத்துவ பரிசோதனகளை மேற்கொள்ள பிரத்யேக மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்





Next Story