விடுதியில் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து டாக்டருக்கு அனுப்பிய பி.எட். மாணவி
மதுரை விடுதியில் மாணவி ஒருவர் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து டாக்டருக்கு அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசார்2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை விடுதியில் மாணவி ஒருவர் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து டாக்டருக்கு அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசார்2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பி.எட். மாணவி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் ஆசிக்(வயது 31). எம்.பி.பி.எஸ் டாக்டரான இவர், கமுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இவரது கிளினிக் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் காளீசுவரி(24). இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி பி.எட். படித்து வருகிறார். இவரும், டாக்டர் ஆசிக்கும் பல ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் காளீசுவரி, தான் தங்கி இருந்த விடுதியில் உள்ள பெண்கள் உடை மாற்றுவது,, நைட்டிகள் அணிந்து தூங்கும் காட்சிகள் ஆகியவற்றை திருட்டுத்தனமாக, வீடியோ எடுத்து டாக்டர் ஆசிக்கின் போனுக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதை விடுதியில் இருந்த பெண் ஒருவர் பார்த்து விடுதி காப்பாளர் ஜனனியிடம் புகார் அளித்தார். அவர் காளீசுவரியின் செல்போனை பார்த்த போது அதில் அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்துள்ளன.
இதுகுறித்து அவர் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார்.
டாக்டர், மாணவி கைது
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் காளீசுவரியின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அவர் தன்னுடன் தங்கியிருந்த பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அனுப்பியதும், பல வீடியோக்களை அழித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் ஆசிக், காளீசுவரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.