தேன்கூட்டை கலைக்க மரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்


தேன்கூட்டை கலைக்க மரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
x

தேன்கூட்டை கலைக்க மரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூரில் ரோட்டோரத்தில் பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது. இதில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் மரத்தில் உள்ள தேன்கூட்டை கலைப்பதற்காக தீப்பந்தம் மூலம் தீ வைத்தனர். இதனால் மரம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டது.

இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் மரம் முழுவதும் எரிந்து கருகி நாசமானது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தீ வைத்துவிட்டு் மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அவர்களை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.


Related Tags :
Next Story