கலெக்டர் அலுவலகம் முன்புசிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்புசிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சிவசேனா கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேனி அருகே கோடாங்கிபட்டியில் வசிக்கும் நிலம் இல்லாத 97 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தலா 2 சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டு தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிவசேனா கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் முருகவேல் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.


Related Tags :
Next Story