மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு  தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தேனி

தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் எம்.பி.எஸ்.முருகன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் சங்கிலி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது இதுதொடர்பான அரசாணை 40-ஐ ரத்து செய்ய வேண்டும், கள்ளர் சீரமைப்பு விடுதிகளை மீண்டும் கள்ளர் சீரமைப்பின் கீழ் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கை தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம், கட்சி நிர்வாகிகள் கொடுத்தனர்.


Next Story