மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு  ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. முறைகேடாக வழங்கப்பட்ட பணி மாறுதலை ரத்து செய்து, வேறு ஒன்றியத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் அதே ஒன்றியத்தில் பணி வழங்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் முருகன் கலந்துகொண்டு பேசினார். இதில் தேனி வட்டார செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


Next Story