சாத்தான்குளம் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


சாத்தான்குளம் நீதிமன்றம் முன்பு  வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் நீதிமன்றம் முன்பு வியாழக்கிழமை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று சங்க அலுவலகத்தை திறக்க வலயுறுத்தி வழக்கறிஞர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர் சங்கம்

சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு தனி அலுவலகம் உள்ளது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிக்கு வந்து, செல்வதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த சங்க அலுவலகத்தை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் சாத்தான்குளம் வழக்கறிஞர் சங்கம் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. இருப்பினும் சங்க அலுவலகம் திறப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை கண்டித்து சாத்தான்குளம் வழக்கறிஞர் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடந்தது. இதற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் கல்யாண் குமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சங்க அலுவலகத்தை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி னர். நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் நன்றி கூறினார்.


Next Story