சிலம்பாட்ட வீரர்களுக்கு கச்சை கட்டும் நிகழ்ச்சி
கோவில்பட்டியில் சிலம்பாட்ட வீரர்களுக்கு கச்சை கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்ட சிலம்பாட்ட வீரர்கள்- வீராங்கனை களுக்கு 2-ம் ஆண்டு கச்சை கட்டும் விழா கோவில்பட்டியில் நடந்தது. தாய்லாந்து சித்த மருத்துவர் முகமது ஜக்காரியா, எஸ்.கணபதி ஆசான் தலைமை தாங்கினார். சிலம்பாட்ட கழக நிர்வாகிகள் எம்.மாரியப்பன், ஜெ.சோலை நாராயணசாமி, சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 98 சிலம்பாட்ட வீரர்கள்- வீராங்கனைகளுக்கு கச்சை கட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தாமோதரன், நகரசபை கவுன்சிலர்கள் செண்பகமூர்த்தி கவியரசன், திருவள்ளுவர் மன்ற துணை தலைவர் திருமலை முத்துச்சாமி, ராஜபிரசன்னா, சிவசக்தி வேல்முருகன், மணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.