பெங்களூரு-காரைக்கால் விரைவு ரெயில் நாகைக்கு வந்தது
பெங்களூரு-காரைக்கால் விரைவு ரெயில் 853 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்டது நாகைக்கு வந்த இந்த ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
வெளிப்பாளையம்:
பெங்களூரு-காரைக்கால் விரைவு ரெயில் 853 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்டது நாகைக்கு வந்த இந்த ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
பெங்களூரு-காரைக்கால் விரைவு ரெயில்
பெங்களூரு - காரைக்கால் இடையே தினசரி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என நாகை-நாகூர் ெரயில் உபயோகிப்பாளர் நல சங்கம் மற்றும் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து பெங்களூரு -காரைக்கால் விரைவு ரெயில் 25-ந்தேதி முதல் இயக்கப்படும் என தென் மேற்கு ரெயில்வே உத்தரவிட்டது. அதன்படி 853 நாட்களுக்கு பிறகு இந்த ரெயில் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு பெங்களூரு ெரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நாகைக்கு இரவு 9.55 மணிக்கு வந்தது. பின்னர் காரைக்காலுக்கு 10.55 மணிக்கு சென்றது.
சிறப்பான வரவேற்பு
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் காரைக்காலில் இருந்து நேற்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டு 6 மணிக்கு நாகைக்கு வந்தது. அப்போது இந்த ரெயிலுக்கு நாகை- நாகூர் ரெயில் உபயோகிப்பாளர் நல சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சங்க தலைவர் மோகன், பொருளாளர் பாலா, ரெயில் என்ஜின் டிரைவர்கள், நாகை ரெயில் நிலைய மேலாளர் பிரபாகரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர்.
இந்த ரெயிலில் முன்பதிவில்லா 10 பெட்டிகள் உள்ளன. கூடுதலாக 2 முன்பதிவு இருக்கை பெட்டிகள், 2 முன்பதிவு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் 2 குளிர்சாதன இருக்கை பெட்டிகளை இணைக்க வேண்டும்.
இருவழி ரெயில்பாதை
தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் காரைக்கால் அல்லது வேளாங்கண்ணியில் இருந்து மதுரை வழியாக ெரயில்கள் இயக்க வேண்டும். தஞ்சையில் இருந்து நாகை வழியாக காரைக்கால் வரை இருவழி ெரயில் பாதை அமைக்க வேண்டும்.
கோவைக்கு அதிகாலையில் விரைவு ரெயில் இயக்க வேண்டும். வெளிப்பாளையம் நடைமேடையை சரி செய்ய வேண்டும் என நாகை ெரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.