சிறந்த அரசு பள்ளியாக தளக்காவூர் நடுநிலைப்பள்ளி தேர்வு
சிறந்த அரசு பள்ளியாக தளக்காவூர் நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.
சிவகங்கை
காரைக்குடி,
தமிழக அரசு 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான சிறந்த அரசு பள்ளிகளை தேர்வு செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் கல்லல் ஊராட்சி ஒன்றியம் தளக்காவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா மற்றும் ஆசிரியர்களை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் ஆரோக்கியசாமி, கல்லல் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் முருகப்பன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Related Tags :
Next Story