கன்னியாகுமரி-கொல்லம் இடையே 2 ரெயில்கள் நாளை ரத்து
கன்னியாகுமரி-கொல்லம் இடையே 2 ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி-கொல்லம் இடையே 2 ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில் ஜங்ஷன்-திருவனந்தபுரம் சென்டிரல் பிரிவில் நேமம்- நெய்யாற்றின் கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (சனிக்கிழமை) ரெயில்வே பணி நடைபெற உள்ளது. எனவே நாளை ரெயில் எண்:06772 கொல்லம் ஜங்ஷன்-கன்னியாகுமரி மெமு எக்ஸ்பிரஸ் ரெயிலும், ரெயில் எண்:06773 கன்னியாகுமரி-கொல்லம் மெமு எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
அதே சமயம் ரெயில் எண்: 16366 நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் கோட்டயம் எக்ஸ்பிரஸ் ரெயில் 1½ மணி நேரம் தாமதமாக 2.30 மணிக்கு புறப்படும். இதே போல் ரெயில் எண்: 06429 கொச்சுவேளியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரெயில் 1½ மணி நேரம் தாமதமாக 3.10 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவல் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.