நட்டாத்தி-சின்ன நட்டாத்தி இடையேரூ.1.92 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்
நட்டாத்தி-சின்ன நட்டாத்தி இடையே ரூ.1.92 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சாயர்புரம்:
நட்டாத்தி-சின்ன நட்டாத்தி இடையே ரூ.1.92 கோடியில் தார்சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தார் சாலை அமைக்கும் பணி
சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்திலிருந்து சின்ன நட்டாத்தி வரை ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கவிழா நடந்தது.
இந்த விழாவுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சாலை பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்மசக்தி, நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதா கலா, துணைத் தலைவர் பண்டாரம், ஊராட்சி செயலாளர் முத்துராஜ், ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய தி.மு.க.செயலாளர் ரவி, சாயர்புரம் நகர செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குடிநீர் தொட்டி திறப்பு
இதேபோல, பழையகாயல் கணேஷ் நகர் கடற்கரை பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, பழையகாயல் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், கிழக்கு வட்டார தலைவர் தாசன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.