நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கியது


நெல்லை-திருச்செந்தூர் இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கியது
x

மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நெல்லை- திருச்செந்தூர் இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கியது.

திருநெல்வேலி

மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நெல்லை- திருச்செந்தூர் இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கியது.

மின்மயமாக்கும் பணிகள் நிறைவு

நெல்லை- திருச்செந்தூர் இடையிலான ரெயில்பாதை மின்மயமாக்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை- திருச்செந்தூர் இடையே மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

தொடர்ந்து நெல்லை- திருச்செந்தூர் இடையே அனைத்து ரெயில்களையும் மின்சார ரெயில் என்ஜின் மூலம் இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நெல்லை- திருச்செந்தூர் இடையே நேற்று மின்சார ரெயில் சேவை தொடங்கியது.

ரெயில் கால அட்டவணை நாளை மாற்றம்

மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்தனர். நெல்லை- திருச்செந்தூர் இடையிலான ரெயில்களின் கால அட்டவணையும் மாற்றம் செய்யப்பட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் பயண நேரமும் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர்- சென்னை இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுவதால் 1 மணி நேரம் 10 நிமிடம் வரையிலும் பயண நேரம் குறையும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story