பகத்சிங் நினைவு ரத்த தான முகாம்
கோவில்பட்டியில் பகத்சிங் நினைவு ரத்த தான முகாம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவீரர் பகத்சிங் 92-வது நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகத்சிங் ரத்ததான கழக கழக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பகத்சிங்கின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கருத்துரிமை கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க தலைவர் செல்லத்துரை, பிரபாகரன் ரத்ததான தலைவர் ரவிக்குமார், செயலாளர் சண்முகராஜ், பொருளாளர் மணிகண்டன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர் தேவசேனா தலைமையில் செவிலியர்கள் லட்சுமிகாந்தம், ராதா, விஜயலட்சுமி, ஆய்வுக நுட்புநர் சேவியர் ஆகியோர் 50 பேரிடம் ரத்ததானம் பெற்றனர்.