திருச்சி அம்மா மண்டபத்தில் பரத்வாஜ் சுவாமிகள் உலக நன்மைக்காக பஞ்சாக்னி தவம்


திருச்சி அம்மா மண்டபத்தில் பரத்வாஜ் சுவாமிகள் உலக நன்மைக்காக பஞ்சாக்னி தவம்
x

திருச்சி அம்மா மண்டபத்தில் பரத்வாஜ் சுவாமிகள் உலக நன்மைக்காக பஞ்சாக்னி தவம் இருந்தார்.

திருச்சி

திருச்சி அம்மா மண்டபத்தில் பரத்வாஜ் சுவாமிகள் உலக நன்மைக்காக பஞ்சாக்னி தவம் இருந்தார்.

உலக நன்மைக்காக வேண்டி

சென்னை, அம்பத்தூர் புவனேஸ்வரி பீடத்தை சேர்ந்தவர் ஜகத்குரு பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள். இவர் உலக நன்மைக்காகவும், மனிதகுல மேம்பாட்டிற்காகவும், நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டியும், கொரோனா போன்ற கொடிய நோய்கள் தாக்காமல் இருக்க வேண்டியும் பல்வேறு யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார். இந்நிலையில் உலக நன்மைக்காக சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து நல்ல மழை பெய்ய வேண்டியும் திருச்சி, அம்மாமண்டபம் பகுதியில் பரத்வாஜ் சுவாமிகள் பஞ்சாக்னி தவத்தில் ஈடுபட்டார். மஞ்சள் நீராடியதுடன், முதல் நாள் விரதம் இருந்த பின்னர் தீ வளையங்கள் சுற்றிவர அக்னி ஜுவாலைகளுக்கு மத்தியில் அமர்ந்தபடி வாராகி அம்மனை நோக்கி மந்திரங்களை கூறியபடி சுமார் 2 மணி நேரம் பஞ்சாக்னி தவத்தில் ஈடுபட்டார்.

பஞ்சாக்னி தவம்

இந்த தவம் குறித்து அவர் கூறுகையில், `288-வது முறையாக இந்த மாதிரியான பஞ்சாக்னி தவத்தில் ஈடுபட்டுள்ளேன். பால்ய வயதில் பஞ்சாக்னி தவத்தில் ஈடுபட்டபோது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிறப்பித்தார்' என்றார்.


Next Story