பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சேத்துப்பட்டு
தேசூர் பேரூராட்சி பாடசாலை தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அனந்தராஜன் வரவேற்றார்.
ஆசிரியர் பயிற்றுநர் தமிழ்நேசன் உள்பட பலர் முன்னிைல வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் ரங்கநாதன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி, உறுப்பினர் பரிமளா, புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஆசிரியர் சரஸ்வதி மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் திவ்யா, அலமேலு, துர்கா மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் பதாகைகள் ஏந்திக்கொண்டு நகரில் முக்கிய வீதியின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
ஊர்வலத்தில் சத்துணவு அமைப்பாளர் புவனேஸ்வரி, கவுன்சிலர்கள் சதீஷ், ஹிரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.