பரதநாட்டிய அரங்கேற்றம்
பரதநாட்டிய அரங்கேற்றம்
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் உள்ள பீகாக் டான்ஸ் அகாடமி, மயூரம் நாட்டிய கலைக்கூடம் சார்பில் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடன கலைஞரும் இயக்குனருமான டாக்டர் ஸ்வர்ணமால்யா தலைமை தாங்கினார். ராமேசுவரம் நகர சபை சேர்மன் நாசர்கான், கலாசேத்திரா வசுந்தரா தாமஸ், பரதநாட்டிய ஆசிரியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மதுஸ்ரீ, லோகிதாஸ்ரீ, கீர்த்தனா ஆகிய 3 பேரும் அரங்கேற்றம் செய்தனர். இதில் இந்த 3 மாணவிகளும் பரதநாட்டியத்தில் தாங்கள் பயின்ற பல்வேறு கலை நிகழ்வுகளை பார்வையாளர்கள் முன்பு மேடையில் அரங்கேற்றமாக செய்து ஆடி அசத்தினர். இந்த மாணவிகளை ராமேசுவரம் நகரசபை சேர்மன் நாசர்கான், டாக்டர் ஸ்வர்ணமால்யா, கலாசேத்ரா வசுந்தரா தாமஸ், ஆசிரியர் ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மயூரம் நாட்டிய கலைக்கூட இயக்குனர் கங்காஜாகீர் செய்திருந்தார்.