பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பதக்கம் பெற்று சாதனை


பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பதக்கம் பெற்று சாதனை
x

பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்கள் பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.

திருச்சி

சென்னையில் தமிழ்நாடு காது கேளாதோர் 18 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கான விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகளுக்கான மையத்தில் இளங்கலை கணினி பயன்பாட்டியியல் திட்டத்தை பயிலும் செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்கள் திருச்சி மாவட்ட காதுகேளாதோர் நல சங்கத்துடன் இணைந்து பங்கேற்றனர். இதில் உயரம் தாண்டுதல் மற்றும் 110 மீட்டர் தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், இளைய நிலை நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் ஆண்களுக்கான 100 மீட்டர் ரிலே மற்றும் பெண்களுக்கான 4×400 மீட்டர் ரிலே ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். இச்சிறப்பு மாணவர்கள் முதல் முறையாக தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் போட்டியிட்டு முதல் முயற்சியிலேயே பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர். பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், பதிவாளர் கணேசன், உடற்பயிற்சி பேராசிரியர் பழனிச்சாமி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபிரபா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story