பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி பாரதீய ஜனதா கட்சியினர் சாலைமறியல்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி பாரதீய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி பாரதீய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்க வலியுறுத்தி காரைக்குடி அண்ணா சிலை அருகே பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் பாரதிபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். மாநில விவசாயபிரிவு துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாவட்ட துணைத்தலைவர் நாராயணன், மாநில தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பரம், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா, பேரூராட்சி கவுன்சிலர் செல்வா, நகர செயலாளர்கள் மலைக்குமார், பழனிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்புவனம்
மேலும் மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையினை குறைத்ததை தொடர்ந்து, மாநில அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் திருப்புவனத்தில் பழைய சந்தை திடல் பகுதியில் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர்.