சாத்தான்குளம் அரசு கல்லூரியில் பாரதியார் நினைவு தினம்
சாத்தான்குளம் அரசு கல்லூரியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 3-ம் ஆண்டு மாணவி வளர்மதி வரவேற்றார். விழாவிற்கு கல்லூரி முதல்வர் சின்னத்தாய் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பவுலின் ராபின்சன் கலந்துகொண்டு பேசினார். தமிழ்த்துறை மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி உஷா நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவி வனிஷா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் ச. பூங்கொடி, மாணவி அ. ஆன்சி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story