பாரதியார் மீசை வரையும் போட்டி
நெல்லையில் பாரதியார் மீசை வரையும் போட்டி நடந்தது.
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நாளையொட்டி அவரது மீசை வரையும் போட்டி நடந்தது. நெல்லை சந்திப்பில் பாரதியார் படித்த ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பாரதியார் சிலை முன்பு இந்த போட்டி நடைபெற்றது. நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு கதர் துணியில் பாரதியாரின் மீசை வரையும் போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பாரதியாரின் மீசையை வரைந்தனர்.
நிகழ்ச்சிக்கு கவிஞர் கிருஷி தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணை தலைவர் ரமேஷ் ராஜா, அன்னை தெரசா அறக்கட்டளை நிர்வாகி மகேஷ், ஓவிய ஆசிரியர் சொக்கலிங்கம், ஓவியர் புருஷோத்தமன், பண்பாட்டு ஆய்வாளர் வெள்உவன், வக்கீல் பிரபு ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் சிறப்பாக மீசை வரைந்த மாணவர்களுக்கு பாரதியாரின் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.