பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
பாரதியார் பிறந்த நாளையொட்டி நெல்லையில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதியார் பிறந்த நாளையொட்டி நெல்லையில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ்
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாநில வக்கீல் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க குமார், ஐ.என்.டி.யு.சி. ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.ம.மு.க.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் துரைபாண்டியன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துபாண்டி, மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆதிபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா
பா.ஜனதா சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாசலபதி தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.